/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தாட்கோ சார்பில் மானிய வாகனங்கள் வழங்கல் தாட்கோ சார்பில் மானிய வாகனங்கள் வழங்கல்
தாட்கோ சார்பில் மானிய வாகனங்கள் வழங்கல்
தாட்கோ சார்பில் மானிய வாகனங்கள் வழங்கல்
தாட்கோ சார்பில் மானிய வாகனங்கள் வழங்கல்
ADDED : ஜூன் 04, 2025 12:32 AM

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டது.
புதிய வாகனங்களுக்கான சாவியை கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான், பயனாளிக்கு வழங்கினார். பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் 3 பேருக்கு தலா ரூ.1,43,971 மானியத்தில், ரூ.28,79,408 மதிப்பிலான 3 வாகனங்கள் வழங்கப்பட்டது.
தாட்கோ மேலாளர் ரமேஷ்குமார், முன்னோடி வங்கி மேலாளர் ராஜேஷ்வரன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.