/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரசு சிறப்பு பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கல் அரசு சிறப்பு பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கல்
அரசு சிறப்பு பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கல்
அரசு சிறப்பு பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கல்
அரசு சிறப்பு பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கல்
ADDED : மார் 20, 2025 05:06 AM

விழுப்புரம்: விழுப்புரம் சாலாமேடு ஆசாகுளம் நரிக்குறவர் மாணவர்களுக்கான அரசு சிறப்பு பள்ளியில், விழுப்புரம் வெல்டன் அறக்கட்டளை சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
வெல்டன் அறக்கட்டளை இயக்குநர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் பாபு வரவேற்றார்.
அறக்கட்டளை நிர்வாகிகள் சுதாகரன், தமிழ்வேந்தன், சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். தொண்டு நிறுவன ஆலோசகர் அலெக்சாண்டர் சிறப்புரையாற்றினார். 40 மாணவர்களுக்கு, புத்தக பேக், டிபன் பாக்ஸ், தண்ணீர் பாட்டில், நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும், சாய்பாபா சம்தாசானி அமைப்பினர் உதவி உபகரணங்களை வழங்கினர்.
ஆசிரியர் முருகன் நன்றி கூறினார்.