/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரசு நடுநிலை பள்ளிக்கு பெஞ்ச், டேபிள் வழங்கல் அரசு நடுநிலை பள்ளிக்கு பெஞ்ச், டேபிள் வழங்கல்
அரசு நடுநிலை பள்ளிக்கு பெஞ்ச், டேபிள் வழங்கல்
அரசு நடுநிலை பள்ளிக்கு பெஞ்ச், டேபிள் வழங்கல்
அரசு நடுநிலை பள்ளிக்கு பெஞ்ச், டேபிள் வழங்கல்
ADDED : ஜூன் 12, 2025 10:32 PM
விழுப்புரம்; விழுப்புரம் அடுத்த டி.கொசப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 120 மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு பெஞ்ச், டேபிள்கள் வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது குறித்து, சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதுார் ஹோண்டா மோட்டார் இந்தியா கார் நிறுவனத்தில் அலுவலராக பணிபுரிந்து வரும் டி.கொசப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலகுமார் என்பவர் தனது நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்தார்.
அதன்படி அந்நிறுவனம் சார்பில், பள்ளிக்கு 40 செட் பெஞ்ச் மற்றும் டேபிள்களை இலவசமாக வழங்கினர். பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) முருகன், ஊராட்சி தலைவர் பிரகாஷ், சமூக ஆர்வலர் ஐயனார், பாலகுமார் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில், அரசு பள்ளிக்கு பெஞ்ச் மற்றும் டேபிள்கள் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.