/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வருவாய் துறையை கண்டித்து காத்திருப்பு போராட்டம் வருவாய் துறையை கண்டித்து காத்திருப்பு போராட்டம்
வருவாய் துறையை கண்டித்து காத்திருப்பு போராட்டம்
வருவாய் துறையை கண்டித்து காத்திருப்பு போராட்டம்
வருவாய் துறையை கண்டித்து காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜூன் 09, 2025 11:27 PM

விழுப்புரம் : வருவாய் துறையை கண்டித்து இந்திய காரல் மார்க்ஸ் கம்யூ., கட்சி விழுப்புரம் கிழக்கு மாவட்டக்குழு சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு மனை பட்டா வழங்காத வருவாய் துறையை கண்டித்து நகராட்சி திடலில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குருதேவன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் ஜெயகாந்தன், மாநிலக்குழு நாகப்பன், சங்கர், விமல் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் பாலமுருகன் கண்டன உரையாற்றினார்.
ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வி, துணை செயலாளர்கள் ரேவதி, மீனா, ஒன்றியக்குழு அபர்ணாதேவி, அஞ்சலைதேவி உட்பட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.