Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மின்வாரியத்தை கண்டித்து மறியல்

மின்வாரியத்தை கண்டித்து மறியல்

மின்வாரியத்தை கண்டித்து மறியல்

மின்வாரியத்தை கண்டித்து மறியல்

ADDED : செப் 12, 2025 04:06 AM


Google News
Latest Tamil News
திண்டிவனம்: திண்டிவனம், ரோஷணை பகுதியில், நேற்று மதியம் ஏற்பட்ட திடீர் மின்அழுத்தம் காரணமாக, அப்பகுதி வீடுகளில் இருந்த 'டிவி', மிக்சி உள்ளிட்ட மின் சாத னங்கள் பழுதடைந்தன.

இதுகுறித்து மின்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மின்துறையின் அலட்சியத்தை கண்டித்து நேற்று மாலை 6:00 மணியளவில் வி.சி., மாவட்ட செயலாளர் திலீபன் தலைமையில் திண்டிவனம் - செஞ்சி சாலையில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள், மின்சாதனங்கள் பழுதடைந்த பகுதியிலுள்ள மின்சார ஒயர்களை மாற்றுவதாகவும், அந்தப்பகுதியில் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைத்து கொடுப்பதாகவும் உறுதியளித்தனர்.

அதனைத் தொடர்ந்த, 6:30 மணியளவில் சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us