/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ எரிந்த புளிய மரத்தை அகற்ற எதிர்ப்பு எரிந்த புளிய மரத்தை அகற்ற எதிர்ப்பு
எரிந்த புளிய மரத்தை அகற்ற எதிர்ப்பு
எரிந்த புளிய மரத்தை அகற்ற எதிர்ப்பு
எரிந்த புளிய மரத்தை அகற்ற எதிர்ப்பு
ADDED : செப் 13, 2025 06:56 AM
விழுப்புரம் :விழுப்புரத்தில் எரிந்த புளிய மரத்தை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தடுத்தனர்.
விழுப்புரம், பானாம்பட்டு பாதையில், நெடுஞ்சாலையோரம் உள்ள ஒரு புளிய மரம், கடந்தாண்டு தீப்பிடித்து எரிந்ததில், மரம் காய்ந்து முறிந்து விழும் நிலையில் இருப்பதால் அகற்ற வேண்டுமென சிலர் கலெக்டருக்கு மனு அளித்தனர். உரிய அனுமதி பெற்று, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், அந்த புளிய மரத்தை அகற்ற, நெடுஞ்சாலைத்துறையினர் ஏலம் விட முயன்றனர். இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மரம் பசுமையாக உள்ளதால், வளர்ந்து நிழல் தரும் மரத்தை அகற்ற கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் தாலுகா போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.
இதுகுறித்து, ஆய்வு செய்து, பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.