/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நோயாளிகளுக்கு புரதச்சத்து உணவு திட்டம்; அரசு மருத்துவக் கல்லுாரியில் துவக்கம் நோயாளிகளுக்கு புரதச்சத்து உணவு திட்டம்; அரசு மருத்துவக் கல்லுாரியில் துவக்கம்
நோயாளிகளுக்கு புரதச்சத்து உணவு திட்டம்; அரசு மருத்துவக் கல்லுாரியில் துவக்கம்
நோயாளிகளுக்கு புரதச்சத்து உணவு திட்டம்; அரசு மருத்துவக் கல்லுாரியில் துவக்கம்
நோயாளிகளுக்கு புரதச்சத்து உணவு திட்டம்; அரசு மருத்துவக் கல்லுாரியில் துவக்கம்
ADDED : ஜூன் 17, 2025 12:15 AM

விக்கிரவாண்டி : விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் புரதச்சத்து உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.
முண்டியம்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி டீன் கீதாஞ்சலி தலைமை தாங்கினார். உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ரவிக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் கணேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி வெங்கடேசன் வரவேற்றார்.
அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நோயாளிகளுக்கு புரதச்சத்து நிறைந்த உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை,பேரூராட்சி மன்ற துணை சேர்மன் பாலாஜி, மாவட்ட கவுன்சிலர்கள் மீனா வெங்கடேசன், முருகன், ஒன்றிய கவுன்சிலர் இளவரசி ஜெயபால், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், துணைத் தலைவர் தினேஷ் குமார், ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட பிரதிநிதி சுதாகர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட துறை பேராசிரியர்கள், மருத்துவ பணியாளர்கள் பங்கேற்றனர்.