Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கண்டமங்கலத்தில் திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு

கண்டமங்கலத்தில் திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு

கண்டமங்கலத்தில் திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு

கண்டமங்கலத்தில் திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு

ADDED : அக் 04, 2025 07:10 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம் : கண்டமங்கலம் ஒன்றியத்தில் நடந்து வரும் அரசு திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையம் மற்றும் வீராணம் ஊராட்சிகளில், பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.2.76 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.

அந்த பணிகளை கலெக்டர் ஷேக்அப்துல்ரஹ்மான் நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, கண்டமங்கலம் ஒன்றியம் மிட்டாமண்டகப்பட்டு மற்றும் பாக்கம் ஊராட்சிகளில், பழங்குடியின மக்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் ஜன்மன் திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களுக்கு தலா ரூ.5.73 லட்சம் மதிப்பீட்டில், 34 வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சொர்ணாவூர் கீழ்பாதி ஊராட்சியில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, சம்மந்தப்பட்ட அலுவலர்களை திட்ட அறிக்கை தயார் செய்து அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

மழவராயனுாரில் நீர்வளத்துறை சார்பில் ரூ.37.80 லட்சம் மதிப்பில் ஆழங்கால் வாய்க்கால் மற்றும் ரூ.36.69 லட்சம் மதிப்பீட்டில் சிறுவந்தாடு வாய்கால்கள் மேம்படுத்தும் பணிகளையும், பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வில், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் கண்ணன், கண்டமங்கலம் பி.டி.ஓ.,க்கள் கார்த்திகேயன், சண்முகம், விழுப்புரம் தாசில்தார் கனிமொழி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us