/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதில்... சிக்கல்; திண்டிவனத்தில் 18 கவுன்சிலர்கள் புறக்கணிப்புநகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதில்... சிக்கல்; திண்டிவனத்தில் 18 கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதில்... சிக்கல்; திண்டிவனத்தில் 18 கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதில்... சிக்கல்; திண்டிவனத்தில் 18 கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதில்... சிக்கல்; திண்டிவனத்தில் 18 கவுன்சிலர்கள் புறக்கணிப்பு

குப்பையை கொட்டி போராட்டம்
இந்த நேரத்தில் 33 வது வார்டு தி.மு.க.,கவுன்சிலர் சின்னச்சாமி திடீரென்று, நகர்மன்ற தலைவர், ஆணையாளர் இருக்கை அருகே வந்து 33 வது வார்டில் குப்பைகள் எரிக்கப்பட்ட குப்பை துகள்களை பையில் கொண்டு வந்து கொட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தீர்மான நகல்கள் கிழிப்பு
நேற்று நடந்த நகர்மன்ற கூட்டத்தில் 51 தீர்மானங்கள் மன்றத்தின் ஒப்புதலுக்காக கொண்டு வரப்பட்டது. இதற்கு தி.மு.க.,கவுன்சிலர்கள் பார்த்தீபன்,சின்னச்சாமி ஆகியோர், ஏற்கனவே நகர்மன்ற கூட்டத்தில் வார்டு பணிகள் குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுங்கள். தற்போது ஒரே சமயத்தில் கொண்டு வரப்பட்ட 51 தீர்மானங்களை நகராட்சி பொது நிதியிலிருந்து நிறைவேற்ற முடியாது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று கூறி, இரண்டு கவுன்சிலர்களும் தீர்மான நகல்களை கிழித்து கீழே போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கவுன்சிலர்கள் வெளிநடப்பு
இதன் பிறகு தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,-பா.ம.க.,கவுன்சிலர்கள் ஆணையாளர், நகர்மன்ற தலைவரை முற்றுகையிட்டு, பொது நிதியிலிருந்து எப்படி 51 தீர்மானங்களை நிறைவேற்ற முடியும் என்று கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தீர்மானம் நிறைவேறுவதில் சிக்கல்
வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள் தாங்கள் வருகை பதிவேட்டில் மட்டும்தான் கையெழுத்து போட்டுள்ளோம். தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கூறினார்.