/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஹிந்தி பிரசார சபா மாணவர்களுக்கு பரிசு ஹிந்தி பிரசார சபா மாணவர்களுக்கு பரிசு
ஹிந்தி பிரசார சபா மாணவர்களுக்கு பரிசு
ஹிந்தி பிரசார சபா மாணவர்களுக்கு பரிசு
ஹிந்தி பிரசார சபா மாணவர்களுக்கு பரிசு
ADDED : மே 27, 2025 07:09 AM

விழுப்புரம் : விழுப்புரம் சங்கரமடத்தில் நாராயண்ஸ் கல்விக்குழுமம், ஹிந்தி பிரசார சபா சார்பில் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தட்சிண பாரத் ஹிந்தி பிரசார சபா முன்னாள் பொது செயலாளர் ராம்தாஸ் தலைமை தாங்கினார். நாராயண்ஸ் கல்விக்குழுமம் முதல்வர் நாகலட்சுமி வரவேற்றார். திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி, மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விடையளித்தார். தொடர்ந்து, சுருக்கெழுத்து தேர்வில் மாநிலத்தில் முதலாவதாக வந்த காலித்கானுக்கு, சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. பின், தட்சிண பாரத் ஹிந்தி பிரசார் சபா தேர்வில் வென்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. செயலாளர் காயத்ரி நன்றி கூறினார்.