ADDED : ஜூன் 16, 2025 12:33 AM

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அடுத்த பெரிய பாபுசமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளி யில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளி தலைமையாசிரியர் தமிழரசி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமச்சந்திரன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் அமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமையாசிரியர் சரவணன் வரவேற்றார்.
பெரியபாபுசமுத்திரம் ஒன்றிய கவுன்சிலர் சரவணன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு மற்றும் கை கடிகாரமும், 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 8 மாணவர்களுக்கு தலா 500 ரூபாய் ஊக்கப் பரிசும் வழங்கி பாராட்டினார்.
அறிவியல் ஆசிரியர் அய்யப்பன் நன்றி கூறினார்.