/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வளத்தியில் ரூ. 2.32 கோடியில் ரிஜிஸ்டர் அலுவலகம் கட்டும் பணிக்கு பூஜை வளத்தியில் ரூ. 2.32 கோடியில் ரிஜிஸ்டர் அலுவலகம் கட்டும் பணிக்கு பூஜை
வளத்தியில் ரூ. 2.32 கோடியில் ரிஜிஸ்டர் அலுவலகம் கட்டும் பணிக்கு பூஜை
வளத்தியில் ரூ. 2.32 கோடியில் ரிஜிஸ்டர் அலுவலகம் கட்டும் பணிக்கு பூஜை
வளத்தியில் ரூ. 2.32 கோடியில் ரிஜிஸ்டர் அலுவலகம் கட்டும் பணிக்கு பூஜை
ADDED : மே 21, 2025 11:19 PM

அவலுார்பேட்டை: வளத்தியில் ரூ. 2.32 கோடி மதிப்பிலான புதிய சார் பதிவாளர் அலுவலகம் கட்டும் பணியை மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
மேல்மலையனுார் தாலுகா வளத்தியில் 2.32 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். சார்பதிவாளர் முருகன் வரவேற்றார்.
மஸ்தான் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி, செல்வி ராமசரவணன், ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், சசிகலா ஜெய்சங்கர், ஊராட்சி தலைவர் விஜயலட்சுமி ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.