/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கோட்டக்குப்பம் கெஸ்ட் ஹவுஸ்களில் போலீசார் திடீர் சோதனை கோட்டக்குப்பம் கெஸ்ட் ஹவுஸ்களில் போலீசார் திடீர் சோதனை
கோட்டக்குப்பம் கெஸ்ட் ஹவுஸ்களில் போலீசார் திடீர் சோதனை
கோட்டக்குப்பம் கெஸ்ட் ஹவுஸ்களில் போலீசார் திடீர் சோதனை
கோட்டக்குப்பம் கெஸ்ட் ஹவுஸ்களில் போலீசார் திடீர் சோதனை
ADDED : செப் 09, 2025 02:20 AM
விழுப்புரம் : கோட்டக்குப்பம் பகுதிகளில் உள்ள கெஸ்ட் ஹவுஸ், ரிசார்ட்களில் சிறப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை செய்தனர்.
புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள், விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம், ஆரோவில் பகுதிகளில் உள்ள ரிசார்ட், கெஸ்ட் ஹவுஸ்களில் தங்கி விடுமுறையை கழிக்கின்றனர். ஓணம் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமமாக கோட்டக்குப்பம் பகுதி ரிசார்ட், கெஸ்ட் ஹவுஸ்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கினர்.
எஸ்.பி., சரவணன் உத்தரவின் பேரில் சிறப்பு பிரிவு போலீசார் 4 பிரிவுகளாக பிரிந்து, சின்ன கோட்டக்குப்பம், பெரிய முதலியார்சாவடி, சின்ன முதலியார்சாவடி, தந்திராயன்குப்பம், ஆரோவில் ரிசார்ட், கெஸ்ட் ஹவுஸ், ஹோம் ஸ்டே உள்ளிட்டவையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அசம்பாவித சம்பவங்களை தடுக்க, விடுதியில் தங்குவோரின் விபரங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.