Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பா.ம.க., இளைஞரணி தலைவர் ஆதரவாளர்கள் மிரட்டல் எதிரொலி ஆலோசனைக் கூட்டத்தில் காரசாரம்

பா.ம.க., இளைஞரணி தலைவர் ஆதரவாளர்கள் மிரட்டல் எதிரொலி ஆலோசனைக் கூட்டத்தில் காரசாரம்

பா.ம.க., இளைஞரணி தலைவர் ஆதரவாளர்கள் மிரட்டல் எதிரொலி ஆலோசனைக் கூட்டத்தில் காரசாரம்

பா.ம.க., இளைஞரணி தலைவர் ஆதரவாளர்கள் மிரட்டல் எதிரொலி ஆலோசனைக் கூட்டத்தில் காரசாரம்

ADDED : மார் 25, 2025 04:13 AM


Google News
பா.ம.க., நிறுவனரால், மாநில இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டவர் முகுந்தன். இவர் நிறுவனரின் மகள் வயிற்று பேரன். கடந்த டிசம்பர் மாதத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனரால் முகுந்தன் நியமிக்கப்பட்டார். மாநில தலைவர் அன்புமணி ஒத்துழைப்பு கிடைக்காததால், முகுந்தன் மாநில இளைஞரணி தலைவர் பதவியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படாத நிலை உள்ளது.

இவர், மாநில சமூக ஊடக பிரிவின் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட ஊடக பிரிவின் தலைவராக இருந்த எண்டியூரைச் சேர்ந்த நவீன் என்பவர், சில நாட்களுக்கு முன், முகுந்தன் பிறந்த நாள் தொடர்பாக அன்புமணியுடன் இருந்த படம் குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை பதிவிட்டார்.

அதில் 'கட்சியில்தான் குழப்பம் செய்கிறார்கள் என்று பார்த்தால், குடும்பத்திலும் செய்வாங்க போல'என கூறியிருந்தார். இதற்கு எதிர்வினையாக்கும் வகையில், முகுந்தன் ஆதரவாளர்கள் சிலர், கடந்த 23ம் தேதி இரவு எண்டியூருக்குச்சென்று நவீனை மிரட்டி விட்டு வந்துள்ளனர்.

அதன் பிறகு நவீன் வகித்து வந்த மாவட்ட ஊடக பிரிவு தலைவர் பதவி பறிக்கப்பட்டு, முன்னுாரைச் சேர்ந்த வேறு ஒருவருக்கு அடுத்த நாளே அப்பதவி வழங்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில், திண்டிவனம் அருகே உள்ள திருமண மண்டபத்தில், மாமல்லபுரம் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க., வைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பா.ம.க., மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, பதவி நீக்கம் செய்யப்பட்ட எண்டியூர் நவீன் மற்றும் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கூட்டமாக கூட்டம் நடந்த அரங்கிற்குள் சென்று பதவி நீக்கம் குறித்து மாவட்ட செயலாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கட்சி நிர்வாகிகள் தலையிட்டு பிரச்னை செய்தவர்களை சமாதானப்படுத்தி, வெளியே அனுப்பி வைத்தனர். பிரச்னை செய்தவர்கள் குறித்து, கட்சியின் நிறுவனருக்கு புகார்கள் சென்றுள்ளதால், விரைவில் நடவடிக்கை பாயும் என கட்சி வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us