/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பராமரிப்பில்லாத விளையாட்டு மைதானங்களால் வீரர்கள் அவதி பராமரிப்பில்லாத விளையாட்டு மைதானங்களால் வீரர்கள் அவதி
பராமரிப்பில்லாத விளையாட்டு மைதானங்களால் வீரர்கள் அவதி
பராமரிப்பில்லாத விளையாட்டு மைதானங்களால் வீரர்கள் அவதி
பராமரிப்பில்லாத விளையாட்டு மைதானங்களால் வீரர்கள் அவதி
ADDED : செப் 25, 2025 11:33 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் பராமரிப்பில்லாத விளையாட்டு மைதானங்களால், வீரர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விழுப்புரம் நகரில், நகராட்சி மைதானம், பெருந்திட்ட வளாக மைதானம், வடக்கு, தெற்கு ரயில்வே காலனி மைதானம் மற்றும் அரசு கல்லுாரி வளாகத்தில் மாவட்ட விளையாட்டு மைதானம் ஆகியவை உள்ளன.
இதில், தற்போது மாவட்ட விளையாட்டு மைதானமும், பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மைதானம் மட்டுமே விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறும் மைதானங்களாக உள்ளன.
நகராட்சி மைதானம் மற்றும் வடக்கு, தெற்கு ரயில்வே காலனி மைதானங்களை சரியான முறையில் பராமரிக்காததால் பயன்பாடற்ற நிலையில் காட்சியளிக்கின்றன.
பெருந்திட்ட வளாக மைதானமும் தற்போது பராமரிப்பற்ற நிலையில், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கியும், வெயில் நாட்களில் குப்பைகள் நிறைந்தும் காணப்படுகிறது.
இதனால், விளையாட்டு வீரர்கள் குடியிருப்பு பகுதிகளில் யாரும் பயன்படுத்தாத இடங்களை அனுமதி கேட்டு வாங்கி, பயிற்சியாளர்கள் மூலம் விளையாட்டு சார்ந்த பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.
மாநில, சர்வதேச அளவில் சாதிக்க நினைக்கும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் நிலையை புரிந்து கொண்டு நகரில் பராமரிப்பில்லாத மைதானங்களை சீரமைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.