/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ செஞ்சியில் மக்கள் நீதிமன்றம் ரூ.7 கோடி 2 லட்சத்தில் தீர்வு செஞ்சியில் மக்கள் நீதிமன்றம் ரூ.7 கோடி 2 லட்சத்தில் தீர்வு
செஞ்சியில் மக்கள் நீதிமன்றம் ரூ.7 கோடி 2 லட்சத்தில் தீர்வு
செஞ்சியில் மக்கள் நீதிமன்றம் ரூ.7 கோடி 2 லட்சத்தில் தீர்வு
செஞ்சியில் மக்கள் நீதிமன்றம் ரூ.7 கோடி 2 லட்சத்தில் தீர்வு
ADDED : செப் 14, 2025 01:41 AM

செஞ்சி : செஞ்சியில் மக்கள் நீதிமன்றத்தில், 7 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பில் வழக்குகள் தீர்வு காணப்பட்டன.
செஞ்சி ஒருங்கிணைந்த கோர்ட்டில், நடந்த மக்கள் நீதிமன்றத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர், சார்பு நீதிபதி கதிரவன் தலைமையில், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி திவ்யா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி செல்வரசி ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.
இதில் 114 வாகன விபத்து வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ. 6 கோடியே 80 லட்சம் நஷ்ட ஈடு வழங்கபட்டது. ரூ. 22 லட்சம் மதிப்பில் 34 வங்கி வழக்குகள், ஒரு கடன் பத்திர வழக்கு, என மொத்தம், 149 வழக்குகள் ரூ. 7 கோடியே 2 லட்சம் மதிப்பில் சமரச முறையில் முடித்து வைக்கப்பட்டன.
இதில் அரசு வழக்கறிஞர் கிருஷ்ணன், பார் அசோசியேஷன் தலைவர் பிரவீன், அட்வேகேட் அசோசியேஷன் தலைவர் கலியமூர்த்தி, மூத்த வழக்கறிஞர்கள் ஆத்மலிங்கம், புண்ணியகோட்டி, சக்திவேல், அஜித்குமார், இலவச சட்ட பணிகள் குழு அலுவலர் பூங்கொடி ஆகியோர் கலந்து கொண்டனர்.