/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கிரிவலத்திற்காக திருவண்ணாமலைக்கு செல்ல நெடுஞ்சாலையில் குவிந்த மக்கள் கிரிவலத்திற்காக திருவண்ணாமலைக்கு செல்ல நெடுஞ்சாலையில் குவிந்த மக்கள்
கிரிவலத்திற்காக திருவண்ணாமலைக்கு செல்ல நெடுஞ்சாலையில் குவிந்த மக்கள்
கிரிவலத்திற்காக திருவண்ணாமலைக்கு செல்ல நெடுஞ்சாலையில் குவிந்த மக்கள்
கிரிவலத்திற்காக திருவண்ணாமலைக்கு செல்ல நெடுஞ்சாலையில் குவிந்த மக்கள்
ADDED : மே 11, 2025 11:49 PM

விழுப்புரம்: சித்ரா பவுர்ணமி கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலை செல்வதற்காக விழுப்புரத்தில் பயணிகள் கூட்டமாக குவிந்ததால் சாலையில் போக்குவரத்து பாதித்தது.
சித்ரா பவுர்ணமியை யொட்டி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நேற்று கிரிவலம் நிகழ்வு நடைபெற்றது.
இதையொட்டி, விழுப்புரத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
இருந்த போதிலும், நேற்று மாலை 4.30 மணி முதல் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் உள்ளே மட்டுமின்றி வெளியே திருச்சி நெடுஞ்சாலையில் பக்தர்கள் பஸ்சிற்காக நீண்ட நேரமாக காத்திருந்தனர்.
நெடுஞ்சாலையை சூழ்ந்தபடி பொதுமக்கள் பஸ்சிற்காக காத்திருந்ததால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இங்கு போக்குவரத்தை சீரமைக்க போலீசார் இல்லாததால், வாகனங்கள் பல ஊர்ந்து கொண்டே சென்றது. பொதுமக்கள் பஸ்சிற்காக காத்திருந்ததால் திருச்சி நெடுஞ்சாலையில் மாலை 5.30 மணிக்கும் மேலாக வாகனங்களின் போக்குவரத்து ஸ்தம்பிப்பு நீடித்தது.