/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஓய்வூதியர் பயனாளிகள் தனி தாசில்தார் ஆய்வு ஓய்வூதியர் பயனாளிகள் தனி தாசில்தார் ஆய்வு
ஓய்வூதியர் பயனாளிகள் தனி தாசில்தார் ஆய்வு
ஓய்வூதியர் பயனாளிகள் தனி தாசில்தார் ஆய்வு
ஓய்வூதியர் பயனாளிகள் தனி தாசில்தார் ஆய்வு
ADDED : ஜூன் 04, 2025 12:34 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தாலுகாவில் முதியோர் ஓய்வூதிய பயனாளிகள் குறித்து சமூக நல தனி தாசில்தார் நேரில் ஆய்வு செய்தார்.
விக்கிரவாண்டி தாலுகாவில் உள்ள 116 கிராமங்களில் முதியோர் ஓய்வூதிய பயனாளிகள் 500க்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஆண்டுதோறும் பயனாளிகள் அந்த பகுதியில், முகவரியில் வசிக்கின்றனரா என ஆய்வு நடத்தப்பட்டும்.
நேற்று சமூக நல தனி தாசில்தார் வேல்முருகன், முண்டியம்பாக்கம், அதனுார், சிறுவாலை கிராமங்களில் ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் வீடுகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு உறுதி செய்தார்.
வருவாய் ஆய்வாளர் ராஜலட்சுமி, வி.ஏ.ஓ.,க்கள் கோவிந்தன், ராஜபூபதி, பத்மநாபன், உதவியாளர் சதீஷ் அரவிந்தன், கிராம உதவியாளர் பாஸ்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.