/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஜமாபந்தியில் ஒரே நாளில் 9 பேருக்கு பட்டா ஜமாபந்தியில் ஒரே நாளில் 9 பேருக்கு பட்டா
ஜமாபந்தியில் ஒரே நாளில் 9 பேருக்கு பட்டா
ஜமாபந்தியில் ஒரே நாளில் 9 பேருக்கு பட்டா
ஜமாபந்தியில் ஒரே நாளில் 9 பேருக்கு பட்டா
ADDED : மே 23, 2025 07:12 AM
செஞ்சி : செஞ்சியில் நடைபெறும் ஜமாபந்தியில் வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்த ஒன்பது பேருக்கு ஒரே நாளில் பட்டா வழங்கி சப் கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
செஞ்சியில் கடந்த 21ம் தேதி முதல் ஜமாபந்தி நடந்து வருகிறது. திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம் தலைமை தாங்கி பொது மக்களிடம் மனுக்களை பெற்று வருகிறார்.
நேற்று நடந்த முகாமிற்கு, தாசில்தார் செல்வகுமார் முன்னிலை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் துரைசெல்வன், ஜமாபந்தி மேலாளர் பாலமுருகன், மண்டல துணை தாசில்தார் ராஜ்குமார், தலைமை இடத்து துணை தாசில்தார் ஜெயபால், ஆர்.ஐ., கீதா, வி.ஏ.ஓ.,க்கள் விமல், மணிக்குமார், சண்முகம் மற்றும் வருவாய் துறையினர் பங்கேற்றனர்.
முகாமில், ஒலக்கூர் குறுவட்டத்தைச் சேர்ந்த 9 பேர் வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர். இவர்கள் அனைவருக்கும் அதிகாரியுடன் ஆலோசனை நடத்தி உடனடியாக பட்டா வழங்கினார்.