ADDED : செப் 15, 2025 02:34 AM

விழுப்புரம்: கெடாரில் பயணிகள் நிழற்குடையில்லாததால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி யடைந்து வருகின்றனர்.
விழுப்புரம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில், கெடார் ஊராட்சி உள்ளது. இங்கு, அ ரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலை பள்ளி, வங்கிகள், போலீஸ் ஸ்டேஷன், மார்க்கெட் உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகின்றன.
இதையொட்டி, கெடாரை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
ஆனால், இங்குள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்குடை வசதி ஏற்படுத்தவில்லை. இதனால், மழை மற்றும் வெயில் காலங்களில் பஸ்சிற்காக காத்திருப்போர் கடும் அவதியடைகின்றனர்.
எனவே, கெடாரில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும்.