/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ உடற்பயிற்சி உபகரணங்களுடன் நகராட்சி மைதானத்தில் பூங்கா உடற்பயிற்சி உபகரணங்களுடன் நகராட்சி மைதானத்தில் பூங்கா
உடற்பயிற்சி உபகரணங்களுடன் நகராட்சி மைதானத்தில் பூங்கா
உடற்பயிற்சி உபகரணங்களுடன் நகராட்சி மைதானத்தில் பூங்கா
உடற்பயிற்சி உபகரணங்களுடன் நகராட்சி மைதானத்தில் பூங்கா
ADDED : ஜூன் 17, 2025 12:58 AM

விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் விளையாட்டு பயிற்சி மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய பூங்கா அமைப்பதற்கு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
விழுப்புரம் காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகே உள்ள நகராட்சி மைதானத்தை, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார். இங்கு, விளையாட்டு வீரர்கள் பயன்பெறும் வகையில், வலை அமைப்போடு கூடிய கிரிக்கெட் பயிற்சி, கால்பந்து, வாலிபால், ஹாக்கி, பேட்மிட்டன் ஆகியவற்றுக்கான மைதானம் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நடைபயிற்சி செய்யும் வகையில் நடைபாதை அமைப்பது, பெண்களுக்கான உடற்பயிற்சி கூடம், சிறுவர்களுக்கான பூங்கா அமைக்கவும் ஆலோசனை நடந்தது.
இதற்கான வரைபடம் மற்றும் திட்ட அறிக்கையை விரைந்து தயாரித்து வழங்கவும், நகராட்சி மைதானத்தை முழுமையாக துாய்மை செய்து, தொடர்ந்து பராமரிக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, சப்கலெக்டர் வெங்கடேஷ்வரன், நகராட்சி ஆணையர் வசந்தி, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், நகர்மன்ற துணை தலைவர் சித்திக்அலி உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.