Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஆட்சிப்பாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனையும் நெல் மூட்டைகள்

ஆட்சிப்பாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனையும் நெல் மூட்டைகள்

ஆட்சிப்பாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனையும் நெல் மூட்டைகள்

ஆட்சிப்பாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனையும் நெல் மூட்டைகள்

ADDED : மே 17, 2025 11:37 PM


Google News
திண்டிவனம்: ஆட்சிப்பாக்கம் நெல் நேரடி கொள்முதல் நிலையத்தில், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திண்டிவனம் அடுத்த ஆட்சிப்பாக்கத்தில் கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டது. ஆட்சிப்பாக்கத்தை சுற்றியுள்ள நொளம்பூர், அண்டப்பட்டு, கீழ்பசார், கீழ் சேவூர், சேந்தமங்கலம், பனையூர், பாங்கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 2500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள், அரசின் நெல் கொள்முதல் நிலையதிற்கு கொண்டுவரப்படுகிறது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விவசாயிகளிடம் பெற்ற நெல் மூட்டைகள் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழையில் நெல் மூட்டைகள் நனைத்து சேதமடைந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து வரும் நெல் மூட்டைகளை, அரசு சேமிப்பு குடோனுக்கு கொண்டு செல்ல வேண்டும், இதுவரை விவசாயிகளுக்கு செலுத்தப்படாத நெல்லுக்கான பணத்தை வங்கிகள் மூலம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us