Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நம்ம பள்ளி... நம்ம வாத்தியார் பேட்டிகள்

நம்ம பள்ளி... நம்ம வாத்தியார் பேட்டிகள்

நம்ம பள்ளி... நம்ம வாத்தியார் பேட்டிகள்

நம்ம பள்ளி... நம்ம வாத்தியார் பேட்டிகள்

ADDED : ஜூன் 14, 2025 11:22 PM


Google News
Latest Tamil News
-பொன்னுசாமி கார்த்திக்,

முன்னாள் மாணவர்

கல்வியால் வளர்ச்சி பெற வேண்டும்

நான் பிறந்த மலையரசன்குப்பம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து நான் வளர்ச்சியடைந்ததை போல் இந்த கிராமத்தில் உள்ள மாணவர்களும் வளர்ச்சி பெற வேண்டும். எனவே கல்விக்கு முன்னுரிமை கொடுத்து இந்த பள்ளிக்கு மாணவர்கள் படிப்பதற்கு தேவையான உபகரனங்களை கொடுத்துள்ளேன். தற்போது, விவசாயத்தில் லாபம் பெற முடியவில்லை. இப்பகுதியில் கல்வியை மேம்படுத்துவதன் மூலம் எதிர் காலத்தில் விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்த முடியும். இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிக்கும், இந்திய அளவிலும் விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம்.



-சேட்டு,

தலைமையாசிரியர் (பொறுப்பு)

செஞ்சி ஒன்றியத்தில் பின்தங்கிய குக்கிராமமாக மலையரசன்குப்பம் உள்ளது. இப்பள்ளி உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்திய பின்னர் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் மேல்நிலை மற்றும் உயர் கல்வி படித்து நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளனர். சி.இ.ஓ., அறிவழகன், டி.இ.ஓ., சிவசுப்ரமணியன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காஞ்சனா, மேலாண்மைக்குழு தலைவர் வெண்ணிலா, முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பினாலும், கிராம பொது மக்கள் ஒத்துழைப்பினாலும் மாணவர்கள் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் உயர் பதவிகளில் இருப்பது பெருமையாக உள்ளது.



-ரமேஷ்,

பொறுப்பாசிரியர்

முன்மாதிரி அரசு பள்ளி

கடந்த 2023-24ம் கல்வியாண்டில் மாவட்ட அளவில் அரசு உயர்நிலை பள்ளிகளில் இந்த பள்ளி முதலிடம் பிடித்து அரசு பள்ளிகளில் முன்மாதிரி பள்ளியாக உள்ளது. இப்பள்ளி மீது முன்னாள் மாணவர்களும், கிராம இளைஞர்களும், பொது மக்களும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். பள்ளியின் முன்னாள் மாணவர் பொன்னுசாமி கார்த்திக் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனமும், கட்டுமான நிறுவனமும் நடத்தி வருவதுடன், நுாற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தந்திருப்பது, பள்ளியின் கல்வி தரத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. சாதாரண குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இப்பள்ளி வரப்பிரசாதமாக உள்ளது.



-காஞ்சனா,

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்

உயர்கல்வி கற்க வாய்ப்பு

மலையரசன்குப்பம் கிராமத்தில் உயர்நிலை கல்விக்கான வாய்ப்பை ஏற்படுத்திய பிறகு ஏராளமானோர் உயர்கல்வி வரை படித்துள்ளனர். இதற்கு முன் பள்ளி வசதியும், பொருளாதார வசதியும் இல்லாமல் ஏராளமானவர்கள் கல்வியை தொடர முடியாமல் இருந்தது.உயர் பள்ளியாக தரம் உயர்ந்த பின்னர் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மேல்நிலை கல்வியும், உயர் கல்வியும் படிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் கடின உழைப்பினால் கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தியுள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us