/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மல்லர் கம்பத்தில் சர்வதேச அளவில் நம் நாடு சாதனை படைக்கும் மல்லர் கம்பத்தில் சர்வதேச அளவில் நம் நாடு சாதனை படைக்கும்
மல்லர் கம்பத்தில் சர்வதேச அளவில் நம் நாடு சாதனை படைக்கும்
மல்லர் கம்பத்தில் சர்வதேச அளவில் நம் நாடு சாதனை படைக்கும்
மல்லர் கம்பத்தில் சர்வதேச அளவில் நம் நாடு சாதனை படைக்கும்
ADDED : செப் 18, 2025 03:44 AM

விழுப்புரம்:தமிழர்களின் பாரம்பரிய கலையான மல்லர் கம்ப விளையாட்டு, தேசிய அளவில் பிரபலமடைய வேண்டும் என பயிற்சியாளர் மல்லன் ஆதித்தன் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மல்லர் கம்ப பயிற்சியாளர் மல்லன் ஆதித்தன்.
இவர், தமிழர்களின் பாரம்பரிய கலையான மல்லர் கம்ப விளையாட்டினை, கடந்த 1999ம் ஆண்டு முதல் பயின்று வருகிறார். மல்லர் கம்பத்தின் தந்தை என போற்றப்படும் நல்லாசிரியர் உலகத்துரையிடம், மல்லர் கம்பம் பயிற்சி பெற்றார். பயிற்சியாளர்கள் ஜனார்த்தனன், கணேஷ் ஆகியோரிடம் தொடர்ந்து கடுமையான பயிற்சியை பெற்ற இவர், தேசிய அளவிலான மல்லர் கம்ப போட்டியில் பங்கேற்று, தமிழகத்திற்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.
அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தேசிய மல்லர் கம்ப போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய மூன்று பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்த போட்டியில் பதக்கம் வென்றதை பாராட்டி, தமிழ்நாடு மல்லர் கம்ப கழகம் இவருக்கு 'மல்லன்' என்ற விருதை வழங்கி கவுரவித்தது.
மல்லர் கம்பத்தில் கற்று தேர்ந்த மல்லன் ஆதித்தன், பயிற்சியாளராக உருவெடுத்து மல்லன் பயிற்சி மையத்தை துவக்கி, ஏராளமான மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார். இவரது மையத்தில் பயின்ற மாணவர்கள் தேசிய போட்டி, கேலோ இந்தியா போட்டி மற்றும் சர்வதேச போட்டியிலும் பதக்கங்களை வென்றுள்ளனர்.
உலகிலேயே மல்லர் கம்ப கலையை மாற்றுத்திறனாளி மாணவர்களாலும் செய்ய முடியும் என்பதை இவரது முயற்சியால் சாத்தியமாக்கி உள்ளார்.
மாற்றுத்திறனாளி மாணவர்களை வைத்து மல்லர் கம்ப பயிற்சி அளித்து வருகிறார். அவர்களை, நேரில் அழைத்து தமிழக முதல்வர் கவுரவித் துள்ளார்.
குறிப்பாக நல்ல நியமச்சந்திரன் என்பவர், சர்வ தேச போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். மல்லர் கம்பத்தில் சாதனை படைத்த மாணவி சங்கீதாவை நேரில் அழைத்து, துணை முதல்வர் பாராட்டு தெரிவித்தார்.
மேலும் தமிழர்களின் பாரம்பரிய கலையான மல்லர் கம்ப விளையாட்டினை பிரான்ஸ் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் ஆறு மாத காலமாக தங்கி, அங்கு செயல்விளக்கம் செய்துள்ளார். பின், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், கேலோ இந்தியா மல்லர் கம்ப பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார்.
கடந்த 2 ஆண்டுகளாக, விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறந்த மல்லர் கம்ப பயிற்சியாளர் விருதை பெற்றுள்ளார்.
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் மல்லர் கம்ப பயிற்சியாளராக உள்ள மல்லன் ஆதித்தன் கூறுகையில், ' தமிழர்களின் பாரம்பரிய கலையான மல்லர் கம்பத்தை கிராமங்களிலும் உள்ள அரசு பள்ளிகளில் பயிற்சியாளர்களை நிறுவி இலவசமாக பயிற்சி அளித்து வருகி றோம்.
தமிழகம் முழுவதும் மல்லர் கம்பத்தில் சிறந்த வீரர்களை உருவாக்குவதே என லட்சியமாக உள்ளது.
மல்லர் கம்ப விளையாட்டு, தேசிய அளவில் பிரபலமடைய வேண்டும். இன் னும் பல மாணவர்களை உருவாக்கி நம் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதே எனது லட்சியம். இதன் மூலம், சர்வதேச அளவில் மல்லர் கம்பத்தில் நமது நாடு சாதனைகளை படைக்கும்' என பெருமையுடன் தெரிவித்தார்.