Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஆம்னி பஸ்கள் மோதல்: 10 பேர் காயம்

ஆம்னி பஸ்கள் மோதல்: 10 பேர் காயம்

ஆம்னி பஸ்கள் மோதல்: 10 பேர் காயம்

ஆம்னி பஸ்கள் மோதல்: 10 பேர் காயம்

ADDED : மார் 26, 2025 07:07 AM


Google News
விழுப்புரம் : திருச்சியிலிருந்து, நேற்று சென்னை நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பஸ்சை கடலுாரைச் சேர்ந்த ராம்கி, 45; என்பவர் ஓட்டிச்சென்றார். அதிகாலை 5:30 மணியளவில் விழுப்புரம் புறவழிச்சாலையில் சென்றபோது, திருவாமாத்துார் சந்திப்பில், முன்னால் சென்ற மற்றொரு ஆம்னி பஸ்சின் பின்னால் மோதியது.

இந்த விபத்தில், டிரைவர் ராம்கி, சென்னையைச் சேர்ந்த அப்துல்ரஹ்மான் மனைவி ஆயிஷாபேகம், 45; உட்பட 10 பேர் காயமடைந்தனர். இவர்கள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டனர்.

விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us