/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பைக் விபத்தில் வட மாநில தொழிலாளி பலி பைக் விபத்தில் வட மாநில தொழிலாளி பலி
பைக் விபத்தில் வட மாநில தொழிலாளி பலி
பைக் விபத்தில் வட மாநில தொழிலாளி பலி
பைக் விபத்தில் வட மாநில தொழிலாளி பலி
ADDED : செப் 17, 2025 11:32 PM
விழுப்புரம்: பைக் மோதிய விபத்தில் நடந்து சென்ற வடமாநில தொழிலாளி பலியானார்.
பீகார் மாநிலம், கரிக்கோயா மாவட்டத்தைச் சேர்ந்த சம்பதி மஞ்சி மகன் இந்தல்மஞ்சி, 41; கூலி தொழிலாளி. இவர், விக்கிரவாண்டி அருகே ஒரத்துார் உர கிடங்கில் வேலை பார்த்து வந்தார்.
இரு தினங்களுக்கு முன், விழுப்புரத்திலிருந்து செஞ்சி சாலையில் நடந்து சென்றார். பூத்தமேடு கூட்ரோடு அருகே நடந்து சென்ற போது பின்னால் வந்த விக்கிரவாண்டி தாலுகா கஸ்பாகரணையை சேர்ந்த அரிகிருஷ்ணன் மகன் அகத்தியன், 22; ஓட்டி வந்த பைக், அவர் மீது மோதியது.
பலத்த காயமடைந்த இந்தல்மஞ்சி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் அகத்தியன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.