/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நியூ ஜான்டூயி பள்ளி 100 சதவீத தேர்ச்சி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நியூ ஜான்டூயி பள்ளி 100 சதவீத தேர்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நியூ ஜான்டூயி பள்ளி 100 சதவீத தேர்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நியூ ஜான்டூயி பள்ளி 100 சதவீத தேர்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நியூ ஜான்டூயி பள்ளி 100 சதவீத தேர்ச்சி
ADDED : மே 17, 2025 11:35 PM

விழுப்புரம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் விழுப்புரம் நியூ ஜான்டூயி பள்ளி தொடர்ந்து 13வது ஆண்டாக, நுாறு சதவீதம் தேர்ச்சி சாதனையை படைத்துள்ளது.
விழுப்புரம் சண்முகபுரம் காலணியில் உள்ள நியூ ஜான்டூயி பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று, பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி சாதனை படைத்துள்ளது. பள்ளி மாணவி நிஷா 500க்கு 484 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார்.
மாணவர் பிரசன்னா 481 மதிப்பெண்களுடன் 2வது இடம் பிடித்தார். மாணவி பவித்ரா 480 மதிப்பெண்களுடன் பள்ளி அளவில் 3வது இடம் பிடித்தார். தேர்வு எழுதிய 69 மாணவர்களில் 43 பேர் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் வீரதாஸ் பாராட்டி, கேடயம் வழங்கினார்.
செயலாளர் ெஷர்லி வீரதாஸ், நிர்வாக அதிகாரி எமர்சன் ராபின், முதன்மை ஒருங்கிணைப்பாளர் சுகன்யா ராபின் உட்பட பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியை ஆகியோரும் மாணவ, மாணவிகளை பாராட்டி, வாழ்த்தினர்.


