/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
ADDED : செப் 10, 2025 01:32 AM

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி, 3வது வார்டில் 15வது மானிய நிதி திட்டத்தின் கீழ் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழா நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி, பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன், 3வது வார்டு கவுன்சிலர் விருதாம்பாள் நாவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கணேசன், செயல் அலுவலர் ஷேக் லத்தீப், துணைச் சேர்மன் ஜோதி ஆகியோர் வரவேற்றனர்.
இந்த விழாவில் பொன்முடி எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
மாவட்ட கவுன்சிலர் விஸ்வநாதன்,ஒன்றிய சேர்மன் ஓம்சிவ சக்திவேல், மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார், பி.டி.ஓ., பாலசுப்பிரமணியன், தாசில்தார் செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் அழகிரி, பேரூராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.