ADDED : செப் 25, 2025 03:42 AM

திண்டிவனம் : திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நவராத்திரி கொலு உற்சவம் நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த துவக்க விழாவில், சாணக்யா கல்வி குழுமத்தின் தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார்.
பள்ளியை சேர்ந்த மழலையர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர், நவராத்திரி கொலு பூஜையை துவக்கி வைத்து, பக்தி பாடல்களை பாடினர்.
நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் அருள்மொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.