Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மர்மமான முறையில் மாடுகள் இறப்பு

மர்மமான முறையில் மாடுகள் இறப்பு

மர்மமான முறையில் மாடுகள் இறப்பு

மர்மமான முறையில் மாடுகள் இறப்பு

ADDED : மார் 24, 2025 04:37 AM


Google News
Latest Tamil News
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அருகே விவசாய நிலத்தில் கட்டப்பட்டிருந்த 4 சினை மாடுகள் பலி மர்மமான முறையில் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்டாச்சிபுரம் அடுத்த காரணை ஊராட்சியைச் சேர்ந்தவர் அருணகிரி, 42; விவசாயி. 4 கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள நிலத்தில் கட்டப்பட்டிருந்த 4 சினை மாடுகளுக்கும் தண்ணீர் வைத்துவிட்டு சென்றவர், காலையில் வந்து பார்த்தபோது, 4 மாடுகளும் இறந்து கிடந்தன.

தகவலறிந்த வி.ஏ.ஓ., அன்புவிழி மற்றும் ஆயந்துார் கால்நடை மருத்துவர் ரவி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். பின், இறந்த மாடுகளை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

திடீரென 4 மாடுகள் மர்மமான முறையில் இறந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us