/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மயிலம் பொறியியல் கல்லுாரி ஆண்டு விளையாட்டு விழா மயிலம் பொறியியல் கல்லுாரி ஆண்டு விளையாட்டு விழா
மயிலம் பொறியியல் கல்லுாரி ஆண்டு விளையாட்டு விழா
மயிலம் பொறியியல் கல்லுாரி ஆண்டு விளையாட்டு விழா
மயிலம் பொறியியல் கல்லுாரி ஆண்டு விளையாட்டு விழா
ADDED : மே 16, 2025 02:33 AM

விழுப்புரம்: மயிலம் பொறியியல் கல்லுாரியில் 27 வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு மயிலம் கல்விக்குழுமம் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இயக்குனர் செந்தில் வரவேற்றார்.
மயிலம் இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் சிறப்புரையாற்றினர். முதல்வர் ராஜப்பன் வாழ்த்துரை வழங்கினார்.
தொடர்ந்து, ஆண்டு விளையாட்டு விழாவை யொட்டி நடந்த போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
உடற்கல்வி இயக்குனர் பிரேம்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். மாணவர்கள் ராஜேஷ், ஈஸ்வரமூர்த்தி, தரணி ஆகியோர் சிறப்பு பட்டம் பெற்றனர்.
தனி நபருக்கான சாம்பியன் பட்டத்தை ஆண்கள் பிரிவில் கணினி அறிவியல் துறை முதலாம் ஆண்டு முதுகலை பிரிவு மாணவர் கோபிநாத், பெண்கள் பிரிவில் கணினி அறிவியல் துறை 4ம் ஆண்டு இளங்கலை பிரிவு மாணவி சவுந்தர்யா ஆகியோர் பதக்கம் பெற்றனர்.
துணை உடற்கல்வி இயக்குனர் கமலி உட்பட துறை தலைவர்கள், பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் ஆகியோர் வென்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்தனர்.
துணை உடற்கல்வி இயக்குனர் பாரதி நன்றி கூறினார்.