/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ செஞ்சியில் ஜமாபந்தி நிறைவு 177 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல் செஞ்சியில் ஜமாபந்தி நிறைவு 177 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல்
செஞ்சியில் ஜமாபந்தி நிறைவு 177 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல்
செஞ்சியில் ஜமாபந்தி நிறைவு 177 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல்
செஞ்சியில் ஜமாபந்தி நிறைவு 177 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல்
ADDED : மே 31, 2025 01:06 AM

செஞ்சி: செஞ்சியில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் 177 பயனாளிகளுக்கு மஸ்தான் எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
செஞ்சியில் கடந்த 21 ம் தேதி ஜமாபந்தி துவங்கி நடந்து வந்தது. இதன் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. திண்டிவனம் சப்கலெக்டர் திவ்யான்ஷூநிகம் தலைமை தாங்கினார். ஆரணி எம்.பி., தரணிவேந்தன் முன்னிலை வகித்தார்.
தாசில்தார் செல்வகுமார் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., 117 பயனாளிகளுக்கு, 39 லட்சத்து 32 ஆயிரத்து 116 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார்அலி, துணை சேர்மன் ஜெயபாலன், சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் துரைச்செல்வன், ஜமாபந்தி மேலாளர் பாலமுருகன், தலைமை இடத்து துணை தாசில்தார் ஜெயபிரகாஷ், மண்டல துணை தாசில்தார் ராஜ்குமார், நில அளவை வட்ட துணை ஆய்வாளர் முனியன், வட்ட வழங்கல் அலுவலர் குமரன், வருவாய் ஆய்வாளர்கள் பிரபு சங்கர், கீதா, சத்யா, வி.ஏ.ஓ.,க்கள் ராஜாராமன், ராஜேஷ் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.
முதுநிலை வருவாய் ஆய்வாளர் கண்ணன் நன்றி கூறினார்.