ADDED : ஜூன் 07, 2025 01:49 AM

விழுப்புரம் : விழுப்புரம் விராட்டிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் மல்லிப்பிரபா தலைமை வகித்தார். மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சரவணன் வரவேற்றார்.
மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜேந்திரன் பங்கேற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
பிளாஸ்டிக் தவிர்ப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மஞ்சள் பைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர். மாசு கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் உதவி பொறியாளர்கள் இளையராஜா, ராம்குமார், சங்கவி உள்ளிட்டோர், மாணவர்களுக்கு மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் பாஸ்கர் நன்றி கூறினார்.