/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மணிலா விதைப்பண்ணை உதவி இயக்குனர் ஆய்வு மணிலா விதைப்பண்ணை உதவி இயக்குனர் ஆய்வு
மணிலா விதைப்பண்ணை உதவி இயக்குனர் ஆய்வு
மணிலா விதைப்பண்ணை உதவி இயக்குனர் ஆய்வு
மணிலா விதைப்பண்ணை உதவி இயக்குனர் ஆய்வு
ADDED : மார் 20, 2025 05:09 AM

வானுார்: தைலாபுரத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள புதிய மணிலா வி.ஆர்.ஐ., 10 ரக விதைப்பண்ணையை வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
வானுார் வட்டாரத்தில், தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின் கீழ் புதிய மணிலா ரகமான வி.ஆர்.ஐ., 10, விவசாயிகளின் வயல்களில் 52 ஏக்கர் பரப்பளவில் செயல்விளக்க விதைப்பண்ணை அமைக்கப்பட்டது. தைலாபுரத்தில் ஹரிராம் என்பவரின், விவசாய நிலத்தில் 2.5 ஏக்கர் மணிலா விதை பண்ணையை வானுார் வேளாண் உதவி இயக்குநர் எத்திராஜ் ஆய்வு செய்தார்.
அப்போது, ஒவ்வொரு செடியிலும் குறைந்தது, 25 முதல் 40 காய்கள் பிடித்திருக்கிறது என்றும், அதிக மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் கொள்முதல் செய்யும் மணிலா வரும் சித்திரை மற்றும் ஆடி பட்டத்தில் விதைப்பு செய்ய விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் என தெரிவித்தார்.
உதவி வேளாண் அலுவலர்கள் ரேகா, பஞ்சநாதன், ஆத்மா உதவி தொழில் நுட்ப மேலாளர் கோவிந்தசாமி, முன்னோடி விவசாயி ஹரிராம் உடனிருந்தனர்.