/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நாய் மீது பைக் மோதி விழுந்தவர் கார் மோதி பலி: மகன் படுகாயம் உறவினர்கள் சாலை மறியல் நாய் மீது பைக் மோதி விழுந்தவர் கார் மோதி பலி: மகன் படுகாயம் உறவினர்கள் சாலை மறியல்
நாய் மீது பைக் மோதி விழுந்தவர் கார் மோதி பலி: மகன் படுகாயம் உறவினர்கள் சாலை மறியல்
நாய் மீது பைக் மோதி விழுந்தவர் கார் மோதி பலி: மகன் படுகாயம் உறவினர்கள் சாலை மறியல்
நாய் மீது பைக் மோதி விழுந்தவர் கார் மோதி பலி: மகன் படுகாயம் உறவினர்கள் சாலை மறியல்
ADDED : ஜூன் 04, 2025 12:27 AM
மரக்காணம் : மரக்காணம் அருகே பைக்கில் சென்றவர் நாய் மீது மோதி கிழே விழுந்தவர், கார் மோதி இறந்தார். மகன் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
வானுார் அருகே உள்ள கிளாப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சிவசக்திவேலன், 43; இவரது மகன் கோகுல்பிரசாந்,12; இருவரும் நேற்று காலை 6:00 மணிக்கு, வீட்டில் இருந்து முருக்கேரி வழியாக திண்டிவத்திற்கு பைக்கில் சென்றனர்.
பைக்கை சிவசக்திவேலன் ஓட்டினார். புதுப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே சாலையின் குறுக்கே நாய் திடீரென சாலையில் ஓடியது. இதை சற்றும் எதிர்பார்க்காத சிவசக்திவேலன் நாய் மீது பைக்கை மோதியதால், இருவரும் கிழே விழுந்து படுகாயமடைந்தனர். அப்பொழுது பைக் பின் தொடர்ந்து வந்த டாடா இன்டிகா கார் சிவசக்திவேலன் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்தவரை, அப்பகுதியினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலன் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழியிலேயே சிவசக்திவேலன் இறந்தார். கோகுல்பிரசாந்த் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இறந்த சிவசக்திவேலன் உறவினர்கள் விபத்து ஏற்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று மாலை 4.00 மணிக்கு திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் சாலை, முருக்கேரி வேளாண்மைதுறை அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை செய்து அனுப்பி வைத்தனர். இதனால் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிந்து, காரை ஓட்டிவந்த பீகாரை சேர்ந்த இப்ரான், 25; என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.