ADDED : ஜூன் 22, 2025 01:39 AM
விழுப்புரம்: வளவனுார் அருகே லாரியில் ஆற்று மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் கவுதமன் மற்றும் போலீசார், நேற்று காலை தென்பெண்ணை ஆற்று பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, சொர்ணாவூர் சுடுகாடு அருகே வந்த டிப்பர் லாரியை பிடித்து சோதனையிட்டதில், ஆற்று மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதனையடுத்து, ஆற்று மணல் கடத்திய கடலுார் மாவட்டம், கிளிஞ்சிக்குப்பத்தை சேர்ந்த குணசேகரன் மகன் பிரபு, 28; என்பவரை வளவனுார் போலீசார் கைது செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.