/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விவாகரத்தான மனைவியிடம் தகராறு செய்தவர் கைது விவாகரத்தான மனைவியிடம் தகராறு செய்தவர் கைது
விவாகரத்தான மனைவியிடம் தகராறு செய்தவர் கைது
விவாகரத்தான மனைவியிடம் தகராறு செய்தவர் கைது
விவாகரத்தான மனைவியிடம் தகராறு செய்தவர் கைது
ADDED : ஜூன் 14, 2025 01:09 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் விவாகரத்தான மனைவியிடம் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்தவர் அன்புராஜ், 32; இவரது மனைவி பத்மஸ்ரீ, 29; கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2024ம் ஆண்டு விவாகரத்து பெற்று, பத்மஸ்ரீ சாலாமேடு என்.ஜி.ஓ., நகரில் வசித்து வருகிறார்.
கடந்த 12ம் தேதி மதுபோதையில் பத்மஸ்ரீ வீட்டிற்கு சென்ற அன்புராஜ், அவரிடம் தகராறு செய்துள்ளார். தட்டிக் கேட்ட பக்கத்து வீட்டை சேர்ந்த பிரபாவதி, 27; மகேஸ்வரி, 32; உமா, 29; ஆகியோரையும், அன்புராஜ் திட்டி தாக்கினார்.
இதுகுறித்து, பத்மஸ்ரீ அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, அன்புராஜை கைது செய்தனர்.