/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பூதக்காளி அம்மன் கோவிலில் மகா யாக சாலை பூஜைகள் பூதக்காளி அம்மன் கோவிலில் மகா யாக சாலை பூஜைகள்
பூதக்காளி அம்மன் கோவிலில் மகா யாக சாலை பூஜைகள்
பூதக்காளி அம்மன் கோவிலில் மகா யாக சாலை பூஜைகள்
பூதக்காளி அம்மன் கோவிலில் மகா யாக சாலை பூஜைகள்
ADDED : ஜூன் 12, 2025 12:33 AM

வானுார்,: ஞானக்கல்மேடு சுயம்பு பூதக்காளி அம்மன் கோயிலில் வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு மகா யாக சாலை பூஜைகள் நடந்தது.
கிளியனுார் அடுத்த ஞானக்கல்மேடு கிராமத்தில் உள்ள சுயம்பு பூதக்காளி அம்பாள் கோவிலில், வைகாசி மாத பவுர்ணமி முன்னிட்டு, விழுப்புரம் தி.மு.க., மத்திய மாவட்ட செயலாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., குடும்பத்தினர் ஏற்பாட்டில் மகா யாக சாலை பூஜைகள் நடந்தது.
முன்னுார் அங்காளம்மன் சங்கர் சுவாமி, சிறப்பு யாகசாலை பூஜைகளை நடத்தினார். அதனை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகமும், கலச நீர் அபிஷேகமும் நடந்தது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் வானுார் ஒன்றிய முன்னாள் சேர்மன் சிவா செய்திருந்தார்.