வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு
வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு
வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு
ADDED : செப் 09, 2025 11:53 PM
விழுப்புரம்; விழுப்புரம் கோர்ட்டில் வழக்கறிஞர்கள் நேற்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
வழக்கறிஞர் சேம நல நிதியை 10 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும். மூன்றாண்டுகளுக்கு குறைவான தண்டனை வழங்கக்கூடிய வழக்குகள், மூன்றாண்டுகளுக்கு மேல் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை முறையான விசாரணையின்றி தீர்ப்புகளை வழங்க சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியதை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று விழுப்புரம் ஒருங்கிணைந்த கோர்ட்டில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.