Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

ADDED : செப் 09, 2025 11:52 PM


Google News
செஞ்சி; செஞ்சி அடுத்த பொற்குணம் மகா மாரியம்மன் விநாயகர், முருகன், கங்கையம்மன், பொன்னியம்மன் கோவில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.

இதையொட்டி நேற்று காலை 10:30 மணிக்கு கணபதி ஹோமம்; மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கலச பூஜை, முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. இன்று இரவு சாமி பிரதிஷ்டை நடக்கிறது.

நாளை காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால ஹோமம், கோபூஜை, மூல மந்திர ஹோமம் மற்றும் காலை 8:30 மணிக்கு தம்பதி பூஜை நடைபெறுகிறது.

தொடர்ந்து காலை 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 9:30 மணிக்கு மாரியம்மனுக்கும், 10:00 மணிக்கு கங்கையம்மன், பொன்னியம்மனுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us