/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கோலியனுார் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம் கோலியனுார் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோலியனுார் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோலியனுார் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோலியனுார் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்
ADDED : மே 13, 2025 12:44 AM

விழுப்புரம் : விழுப்புரம் மத்திய மாவட்டம் கோலியனுார் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
கோலியனுார் தேரடி வீதியில் நடந்த கூட்டத்திற்கு, கிழக்கு ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் சச்சிதானந்தம் வரவேற்றார். வளவனுார் பேரூர் நகர செயலாளர் ஜீவா, அவை தலைவர் கண்ணப்பன், மாவட்ட கவுன்சிலர் தமிழ்செல்வி கேசவன், தகவல் தொழில்நுட்பஅணி அமைப்பாளர் அன்பரசு, விவசாய அணி துணை அமைப்பாளர் கேசவன், துணை செயலாளர் ஜெயந்தி ராஜகணேஷ் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் கபாகாந்தி சிறப்புரையாற்றினர். மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் புஷ்பராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் சம்பத், பஞ்சநாதன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கிளை செயலாளர் அய்யனார் நன்றி கூறினார்.