/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ செஞ்சி அப்பம்பட்டில் கருணாநிதி பிறந்த நாள் விழா செஞ்சி அப்பம்பட்டில் கருணாநிதி பிறந்த நாள் விழா
செஞ்சி அப்பம்பட்டில் கருணாநிதி பிறந்த நாள் விழா
செஞ்சி அப்பம்பட்டில் கருணாநிதி பிறந்த நாள் விழா
செஞ்சி அப்பம்பட்டில் கருணாநிதி பிறந்த நாள் விழா
ADDED : ஜூன் 04, 2025 12:24 AM

செஞ்சி: செஞ்சி அப்பம்பட்டில் தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் செஞ்சி மற்றும் அப்பம்பட்டில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
செஞ்சியில் பேரூராட்சித் தலைவர் மொக்தியார் அலி, அப்பம்பட்டில் ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
வல்லம் ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜான்பாஷா, சீனிவாசன், பொன்னம்பலம், சிவக்குமார், தொண்டரணி பாஷா, பொறியாளர் அணி சிவப்பிரகாசம், இளைஞரணி பழனி, அவைத்தலைவர் வாசு, ஆறுமுகம், நிர்வாகிகள் சம்பத், சேகர், மாவட்ட பிரதிநிதிகள் அய்யாதுரை, சர்தார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.