/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் தேர் திருவிழா இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் தேர் திருவிழா
இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் தேர் திருவிழா
இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் தேர் திருவிழா
இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் தேர் திருவிழா
ADDED : ஜூன் 08, 2025 10:22 PM

வானுார் : இரும்பை மாகாளேஸ்வரர் கோவிலில் 6ம் ஆண்டு பிரமோற்சவ விழாவையொட்டி தேர் திருவிழா நடந்தது.
வானுார் அடுத்த இரும்பை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மதுசுந்தரநாயகி உடனுறை மாகாளேஸ்வரர் கோவில், 6ம் ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த மாதம் 31ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி, தினந்தோறும் காலை 9;00 மணிக்கு அபிஷேகமும், சந்திரசேகரர் உள்புறப்பாடும், காலை 10;00 மணிக்கு மூலவர் அபிஷேகமும், இரவு 7;00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் சந்திரசேகரர் புறப்பாடும் நடந்து வந்தது.
கடந்த 4ம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று காலை திருத்தேர் திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் மீண்டும் கோவிலை அடைந்தது. நாளை 10ம் தேதி இரவு 7;00 மணிக்கு தெப்பல் உற்சவமும் நடக்கிறது.