ADDED : ஜன 09, 2024 10:47 PM
விழுப்புரம், - மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
தலைமை தபால் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் சவுரிராஜன் தலைமை தாங்கினார். நிர்வாகக்குழு ராமச்சந்திரன், பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன் கண்டன உரையாற்றினார்.
துணைச் செயலாளர் முருகன், பொருளாளர் இன்பஒளி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு கேட்டுள்ள 21 ஆயிரத்து 692 கோடி நிவாரண நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


