/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நகர்புற நலவாழ்வு மைய கட்டடம் திறப்பு நகர்புற நலவாழ்வு மைய கட்டடம் திறப்பு
நகர்புற நலவாழ்வு மைய கட்டடம் திறப்பு
நகர்புற நலவாழ்வு மைய கட்டடம் திறப்பு
நகர்புற நலவாழ்வு மைய கட்டடம் திறப்பு
ADDED : ஜூலை 04, 2025 02:01 AM

கோட்டக்குப்பம்:கோட்டக்குப்பத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில், நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டடத்தை முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட, 18 வது வார்டு ஜாமியா மஸ்ஜீத் ஷாதி மகால் எதிரில் 15வது நிதிக்குழு, 2022-23ம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் நகர் புற நகர் நல வாழ்வு மையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இந்த நலவாழ்வு மைய கட்டடத்தை திறந்து வைத்தார்.
இதையொட்டி, கோட்டக்குப்பத்தில் நடந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் ஜெயமூர்த்தி தலைமை தாங்கினார்.
வானுார் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார். நகர்மன்ற துணைத்தலைவர் ஜீனத்பீவி, நகராட்சி ஆணையாளர் புகேந்திரி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ரவிக்குமார் எம்.பி., பங்கேற்று, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதில் வானுார் ஒன்றிய சேர்மன் உஷா முரளி, கோட்டக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சரண்யா, நகர்புற நலவாழ்வு மைய டாக்டர் சவுமியா, நகர்மன்ற கவுன்சிலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமலிங்கம், சுகாதார ஆய்வாளர் ரவி, பகுதி சுகாதார செவிலியர் சாவித்திரி, செவிலியர் விமலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.