/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரசு போட்டித்தேர்வு இலவச பயிற்சி மைய துவக்க விழா; அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., அழைப்பு அரசு போட்டித்தேர்வு இலவச பயிற்சி மைய துவக்க விழா; அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., அழைப்பு
அரசு போட்டித்தேர்வு இலவச பயிற்சி மைய துவக்க விழா; அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., அழைப்பு
அரசு போட்டித்தேர்வு இலவச பயிற்சி மைய துவக்க விழா; அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., அழைப்பு
அரசு போட்டித்தேர்வு இலவச பயிற்சி மைய துவக்க விழா; அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., அழைப்பு
ADDED : செப் 09, 2025 11:52 PM

விழுப்புரம்; விழுப்புரத்தில் அரசு போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்க விழா, நாளை நடைபெறுகிறது.
தமிழக அரசின் வன்னியர் பொதுசொத்து நலவாரிய உறுப்பினர் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை :
விழுப்புரம், வழுதரெட்டி, முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி மணி மண்டபத்தில் உள்ள நுாலகத்தில், அரசு போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
வன்னியர் பொது சொத்து நல வாரியத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தின் துவக்க விழா, நாளை காலை 10:45 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், எம்.எல்.ஏ., லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
வன்னியர் பொதுசொத்து நல வாரிய தலைவர் ஜெயராமன் வரவேற்கிறார். முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணி ஆகியோர் பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை வன்னியர் பொதுச்சொத்து நல வாரிய உறுப்பினர் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., புதுச்சேரி ஏ.ஜி.பத்மாவதி இருதய மருத்துவமனை சேர்மன் இளங்கோவன், ஏ.ஜி.பத்மாவதி கோவிந்தசாமி மருத்துவக் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.