ADDED : மார் 28, 2025 05:04 AM

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அல்லாசாமி கோவிலில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
தி.மு.க., நகர செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். நகர பொருளாளர் சையத் நாசர் வரவேற்றார். பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன், துணைச் சேர்மன் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி சிறப்புரையாற்றினார்.
மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் விஜயபாபு, மாவட்ட பிரதிநிதி சுரேஷ், நகர அவைத் தலைவர் செந்தில் முருகன், நகர இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், முன்னாள் நகர செயலாளர் செல்வம் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் அறிவழகன், பாக்கியராஜ், அப்பு, அரங்க ராஜன் உட்பட கட்சி நிர்வாகி சுலைமான் சதாம் உட்பட பலர் பங்கேற்றனர்.