/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பசுந்தாள் உர பயிர் விதைகள்: மானிய விலையில் விற்பனை பசுந்தாள் உர பயிர் விதைகள்: மானிய விலையில் விற்பனை
பசுந்தாள் உர பயிர் விதைகள்: மானிய விலையில் விற்பனை
பசுந்தாள் உர பயிர் விதைகள்: மானிய விலையில் விற்பனை
பசுந்தாள் உர பயிர் விதைகள்: மானிய விலையில் விற்பனை
ADDED : ஜூன் 10, 2025 10:26 PM
வானுார்; வானுார் தாலுகாவில் பசுந்தாள் உர பயிர் விதைகள், 50 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
வானுார் வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ் செய்திக்குறிப்பு:
வானுார் தாலுகாவில் கடந்த வாரம் பெய்த கோடை மழையை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு செய்து வருகின்றனர். இந்த ஈரப்பதத்தை பயன்படுத்தி சம்பா நெல் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் நெல் நடவு செய்வதற்கு முன் நிலத்தை உழவு செய்து தக்கப்பூண்டு விதைப்பு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தக்க பூண்டு விதைகள் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, பரங்கினி, கிளியனுார் வேளாண் விரிவாக்க மையங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில், மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஒரு கிலோ தக்க பூண்டு விதை, மானியம் போக 49.75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏக்கருக்கு ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 20 கிலோ மட்டுமே வழங்கப்படும்.
விதை தேவைப்படும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.