/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கிரீன் பாரடைஸ் பள்ளியில் தாத்தா, பாட்டி தினம் கிரீன் பாரடைஸ் பள்ளியில் தாத்தா, பாட்டி தினம்
கிரீன் பாரடைஸ் பள்ளியில் தாத்தா, பாட்டி தினம்
கிரீன் பாரடைஸ் பள்ளியில் தாத்தா, பாட்டி தினம்
கிரீன் பாரடைஸ் பள்ளியில் தாத்தா, பாட்டி தினம்
ADDED : மார் 22, 2025 08:55 PM

திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த ரெட்டணை கிரீன் பாரடைஸ் பள்ளியில் தாத்தா, பாட்டி தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளர் சண்முகம் தலைமை தாங்கினார். முதன்மை இயக்குனர் வனஜா முன்னிலை வகித்தார். கே.ஜி., முதல் இரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின், தாத்தா மற்றும் பாட்டி ஆகியோர் விழாவிற்கு அழைக்கப்பட்டு, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும், குடும்பத்தில் தாத்தா மற்றும் பாட்டி ஆகியோரின் முக்கியத்துவம் குறித்த நாடகமும் நடந்தது.
விழாவிற்கு வருகை தந்த தாத்தா, பாட்டிக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி செயலாளர் சந்தோஷ், நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் சண்முகம் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் லட்சுமி நன்றி கூறினார்.