ADDED : ஜூன் 08, 2025 04:05 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே பட்டதாரி பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த பிடாகத்தை சேர்ந்தவர் சக்திவேல், 50; இவரது மகள் அனிதா, 23; பி.எஸ்சி., பட்டதாரி. 5ம் தேதி வீட்டிலிருந்து கடைக்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.